விசுவாவசு ஆண்டு – மகரசங்கராந்தி பொங்கல் பண்டிகை!
பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்: 15-1-2026 வியாழக்கிழமையன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.17-க்குள், கும்ப லக்னத்தில், சுக்கிர ஹோரையில், புதுப் பானையை அலங்கரித்து, பொங்கல் வைக்கவும். “பொங்கலோ, பொங்கல்” சொல்லி, சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்யவும். குடும்பத்திலுள்ள அனைவரும் சூரிய பகவானுக்கு, கற்பூராத்தி காட்டி, நமஸ்கரிக்கவும். இன்று, வீட்டிலுள்ள பெற்றோர், பெரியோர்களை வணங்கி, அவர்களது ஆசியைப் பெறவும்.மறுநாள் மாட்டுப் பொங்கல். பசுக்கள், கன்றுகள், காளைகள் ஆகியவற்றைக் குளிப்பாட்டி, மஞ்சள்-குங்குமமிட்டு, புஷ்பத்தால் அலங்கரித்து, பொங்கல் கொடுத்து, கற்பூராத்தி காட்டி, மும்முறை வலம் வந்து வணங்கவும். குடும்பத்தில், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி நிலவும். இதற்கு மறுதினம் “காணும் பொங்கல்”. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பெரியோர்கள் ஆகியோரைக் கண்டு அவர்களது ஆசியைப் பெறும் நன்னாளாகும்.
பூரண சந்திர கிரகணம் – 1
விசுவாவசு வருஷம், ஆவணி மாதம் 22-ஆம் தேதிக்கு சரியான ஆங்கலத் தேதி 7-9-2025, ஞாயிற்றுக்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, சதயம் நட்சத்திரம், கும்ப ராசியில், மேஷ லக்னத்தில், ராகு கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகணம் ஆரம்பம் : இரவு மணி 9.51
கிரகணம் மத்தியமம் : இரவு மணி 11.42
கிரகணம் முடிவு : இரவு மணி 2.25
அன்று மதியம் 1.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள், சிறுகுழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.
பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள், திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். கிரகண காலத்தில், தாய் – தந்தை இழந்தவர்களுக்கு, பித்ருக்களுக்கு தில (எள்) தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால், மறைந்த முன்னோர்கள் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. கிரகணச் சாயை கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். கிரகண காலத்தின்போது, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் தியானம் செய்துகொண்டிருக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின்பு, நீராடி, அவரவர் குல வழக்கப்படி திருநீறணிந்து, இறைவனைப் பூஜிக்க வேண்டும்.
விசுவாவசு தமிழ் புத்தாண்டின் புண்ணிய தினங்கள்
சித்திரை 1 (14-4-2025) : விசுவாவசு, தமிழ் புத்தாண்டு பிறப்பு.
சித்திரை 13 (26-4-2025) : ராகு – கேது ராசி பெயர்ச்சி.
சித்திரை 14 (27-4-2025) : சர்வ அமாவாசை
சித்திரை 16 (29-4-2025) : கிருத்திகை விரதம்
சித்திரை 17 (30-4-2025) : அட்சய திருதியை
சித்திரை 19 (2-5-2025) : ஸ்ரீ ஆதி சங்கரர், ஸ்ரீ மத் ராமானுஜர் அவதார தினம்.
சித்திரை 20 (3-5-2025) : சஷ்டி விரதம்.
சித்திரை 21 (4-5-2025) : கத்திரி ஆரம்பம்.
சித்திரை 23 (6-5-2025) : ஸ்ரீ வாசவி ஜெயந்தி.
சித்திரை 25 (8-5-2025) : சர்வ ஏகாதசி
சித்திரை 27 (10-5-2025) : சனிப்பிரதோஷம்.
சித்திரை 28 (11-5-2025) :ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, குரு பெயர்ச்சி
சித்திரை 29 (12-5-2025) : சித்ர குப்தர் பூஜை, சித்ராபௌர்ணமி.
வைகாசி 1 (15-5-2025) : விஷ்ணுபதி புண்ணியகாலம். வைகாசி மாதப் பிறப்பு.
வைகாசி 9 (23-5-2025) : சர்வ ஏகாதசி
வைகாசி 10 (24-5-2025) : சனிப் பிரதோஷம்.
வைகாசி 11 (25-5-2025) : மாத சிவராத்திரி.
வைகாசி 12 (26-5-2025) : சர்வ அமாவாசை.
வைகாசி 14 (28-5-2025) : அக்னி நட்சத்திரம் நிவர்த்தி.
வைகாசி 24 (7-6-2025) : சர்வ ஏகாதசி.
வைகாசி 25 (8-6-2025) : பிரதோஷம்.
வைகாசி 26 (9-6-2025) : வைகாசி விசாகம்.
வைகாசி 27 (10-6-2025) : காஞ்சி ஸ்ரீ மகாபெரியவா ஜெயந்தி.
வைகாசி 31 (14-6-2025) : சங்கடஹர சதுர்த்தி.
ஆனி 6 (21-6-2025) : ஏகாதசி.
ஆனி 8 (22-6-2025) : கூர்ம ஜெயந்தி.
ஆனி 9 (23-6-2025) : பிரதோஷம்.
ஆனி 10 (24-6-2025) : போதாயன அமாவாசை. ஆனி 11 (25-6-2025) : அமாவாசை.
ஆனி 15 (29-6-2025) : சதுர்த்தி விரதம்.
ஆனி 16 (30-6-2025) : குமார சஷ்டி.
ஆனி 17 01-7-2025) : ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். ஆனி திருமஞ்சனம். சஷ்டி விரதம்.
ஆனி 22 (6-7-2025) : சயன ஏகாதசி.
ஆனி 23 (7-7-2025) : சாதுர்மாத விரத ஆரம்பம்.
ஆனி 24 (8-7-2025) : பிரதோஷம். ஜேஷ்டாபிஷேகம்.
ஆனி 26 (10-7-2025) : குருபூர்ணிமா. வியாஸ பூஜை. பௌர்ணமி விரதம்.
ஆனி 30 (14-7-2025) : சங்கடஹர சதுர்த்தி.
ஆனி 32 (16-7-2025) : தட்சிணாயன புண்ணியக் காலம், ஆடிமாதப் பிறப்பு.
ஆடி 5 (21-7-2025) : சர்வ ஏகாதசி.
ஆடி 6 (22-7-2025) : பிரதோஷம்.
ஆடி 7 (23-7-2025) : மாத சிவராத்திரி.
ஆடி 8 (24-7-2025) : ஆடி அமாவாசை.
ஆடி 12 (28-7-2025) : திருவாடிப்பூரம். சதுர்த்தி விரதம்.
ஆடி 13 (29-7-2025) : கருட பஞ்சமி, நாக பஞ்சமி.
ஆடி 14 (30-7-2025) : சஷ்டி விரத்ம.
ஆடி 18 (3-8-2025) : 18-ம்பெருக்கு. காவிரி பூஜை விசேஷம்.
ஆடி 21 (6-8-2025) : பிரதோஷம்.
ஆடி 23 (8-8-2025) : ஸ்ரீ வரலட்சுமி விரதம்.
ஆடி 24 (9-8-2025) : ருக், யஜூர் உபாகர்மா, ரட்சாபந்தன், ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி.
ஆடி 25 (10-8-2025) : காயத்ரி ஜபம்.
ஆடி 31 (16-8-2025) : கிருஷ்ண ஜெயந்தி.
ஆவணி 4 (20-8-2025) : பிரதோஷம்.
ஆவணி 6 (22-8-2025) : சர்வ அமாவாசை
ஆவணி 10 (26-8-2025) : சாம உபாகர்மா
ஆவணி 11 (27-8-2025) : விநாயகர் சதுர்த்தி
ஆவணி 12 (28-8-2025) : ரிஷி பஞ்சமி.
ஆவணி 13 (29-8-2025) : சஷ்டி விரதம்.
ஆவணி 22 (7-9-2025) : சந்திர கிரகணம்.
ஆவணி 23 (8-9-2025) : மகாளயபட்சம் ஆரம்பம்.
ஆவணி 30 (15-9-2025) : பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
புரட்டாசி 1 (17-9-2025) : ஏகாதசி.
புரட்டாசி 5 (21-9-2025) : சர்வ மகாளய அமாவாசை.
புரட்டாசி 6 (22-9-2025) : நவராத்திரி ஆரம்பம்
புரட்டாசி 13 (29-9-2025) : சரஸ்வதி ஆவாஹனம்.
புரட்டாசி 15 (1-10-2025) : சரஸ்வதி பூஜை, ஆயுத பூைஜ
புரட்டாசி 16 (2-10-2025) : விஜயதசமி.
புரட்டாசி 18 (4-10-2025) : சனிப் பிரதோஷம்.
புரட்டாசி 19 (5-10-2025) : நடராஜர் அபிஷேகம்
ஐப்பசி 1 (18-10-2025) : சனிப் பிரதோஷம்், துலா காவேரி ஸ்நானம் ஆரம்பம்.
ஐப்பசி 2 (19-10-2025) : யம தீபம். இரவு சதுர்த்தசி ஸ்நானம்
ஐப்பசி 3 (20-10-2025) : தீபாவளிப் பண்டிகை
ஐப்பசி 4 (21-10-2025) : சர்வ அமாவாசை, லட்சுமி குபேர பூஜை, கேதார கௌரி விரதம்
ஐப்பசி 6 (23-10-2025) : யம துதிகை
ஐப்பசி 10 (27-10-2025) : சூர சம்ஹாரம். சஷ்டி விரதம்.
கார்த்திகை 1 (17-11-2025) : முடவன் முழக்கு, பிரதோஷம்.
கார்த்திகை 2 (18-11-2025) : மாத சிவராத்திரி
கார்த்திகை 3 (19-11-2025) : சர்வ அமாவாசை.
கார்த்திகை 15 (1-12-2025) : கைசிக ஏகாதசி
மார்கழி 1 (16-12-2025) : மார்கழி மாதப் பிறப்பு. தனுர்மாதப் பிறப்பு.
மார்கழி 4 (19-12-2025) : சர்வ அமாவாசை, ஸ்ரீ அனுமன் ஜெயந்தி.
மார்கழி 15 (30-12-2025) : வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீ ரங்கத்தில் விசேஷம்.
மார்கழி 19 (3-1-2026) : ஆருத்ரா தரிசனம்.
மார்கழி 20 (4-1-2026) : ரமண மகரிஷி ஜெயந்தி.
மார்கழி 23 (7-1-2026) : திருவையாறு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் ஆராதனை.
மார்கழி 27 (11-1-2026) : கூடாரவல்லி.
மார்கழி 30 (14-1-2026) : போகிப் பண்டிகை
தை 1 (15-1-2026) : உத்தராயண. புண்ணியகாலம், மகர சங்கராந்தி – பொங்கல் பண்டிகை.
தை 2 (16-1-2026) : மாட்டுப் பொங்கல். மாத சிவராத்திரி.
தை 3 (17-1-2026) : காணும் பொங்கல்
தை 4 (18-1-2026) : தை அமாவாசை.
தை 11 (25-1-2026) : ரத சப்தமி.
தை 12 (26-1-2026) : பீஷ்மாஷ்டமி.
தை 13 (27-1-2026) : கிருத்திகை விரதம்
தை 15 (29-1-2026) : சர்வ ஏகாதசி.
தை 16 (30-1-2026) : பிரதோஷம்.
தை 18 (1-2-2026) : தைப்பூசம்.
தை 23 (6-2-2026) : திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் ஜெயந்தி
மாசி 3 (15-2-2026) : மகா சிவராத்திரி.
மாசி 4 (16-2-2026) : போதாயன அமாவாசை.
மாசி 5 (17-2-2026) : சர்வ அமாவாசை.
மாசி 18 (2-3-2026) : ஸ்ரீ நடராஜர் திருமஞ்சனம், மாசிமகம் ஹோலிப் பண்டிகை.
பங்குனி 4 (18-3-2026) : சர்வ அமாவாசை.
பங்குனி 10 (24-3-2026) : சஷ்டி விரதம்.
பங்குனி 13 (27-3-2026) : ஸ்ரீ ராம நவமி.
பூரண சந்திர கிரகணம் – 2
விசுவாவசு வருடம், மாசி மாதம் 19-ஆம் தேதிக்கு சரியான ஆங்கிலத் தேதி 3-3-2026, செவ்வாய்க்கிழமை, சுக்கிலபட்சம் (வளர்பிறை), பௌர்ணமி திதி, பூரம் நட்சத்திரம், சிம்ம ராசியில், கடக லக்னத்தில், கேது கிரஸ்த பூரண சந்திர கிரகணம் நிகழ்கிறது.
கிரகணம் ஆரம்பம் : பிற்பகல் மணி 3.20
கிரகணம் மத்தியமம் : பிற்பகல் மணி 5.04
கிரகணம் முடிவு : இரவு மணி 7.53
அன்று காலை 8.30 மணிக்கு மேல் சாப்பிடக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிகர்கள், சிறுகுழந்தைகள், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு.பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்கள்செவ்வாய்க்கிழமைகளில் பிறந்தவர்கள், பரணி, மகம், பூரம், பூராடம் நட்சத்திரங்்களில் பிறந்தவர்கள், பரிகாரம் செய்துகொள்ள வேண்டும். பௌர்ணமி சிரார்தத்தை (திதியை) மறுதினம் செய்ய வேண்டும். கிரகண காலத்தில், தாய் – தந்தை இழந்தவர்களுக்கு, பித்ருக்களுக்கு தில (எள்) தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால், மறைந்த முன்னோர்கள் திருப்தியும், மகிழ்்ச்சியும் அடைந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் வெளியே வரக்கூடாது. கிரகணச் சாயை கருவிலுள்ள குழந்தையைப் பாதிக்கும். கிரகண காலத்தின்போது, இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் தியானம் செய்துகொண்டிருக்க வேண்டும். கிரகணம் முடிந்தபின்பு, நீராடி, அவரவர் குல வழக்கப்படி திருநீறணிந்து, இறைவனைப் பூஜிக்க வேண்டும்.
நவகிரகங்களின் சக்தி!
நவகிரகங்களின் சக்தி!
நவகிரகங்களின் சக்திகளுக்கு ஏற்ப, அவற்றின் பொறுப்புகளும் ஆண்டுதோறும் மாறுபடுகின்றன. இம்மாறுதல்களுக்கேற்ப, அவைகளுக்கு பதவிகளும் குறிப்பிடப்படுகின்றன ஜோதிடக் கலையில்!
இப்பதவிகள், அவற்றின் சக்தியையே குறிக்கின்றன. இவ்விதியின் அடிப்படையில், விசுவாவசுப் புத்தாண்டிலும், கிரகங்களுக்குக் கீழ்க்கண்டபடி, பதவிகள் கூறப்பட்டுள்ளன.
ராஜா : சூரியன்
மந்திரி : சந்திரன்
சேனாதிபதி : சூரியன்
அர்க்காதிபதி : சூரியன்
மேகாதிபதி : சூரியன்
தான்யாதிபதி : செவ்வாய்
ரசாதிபதி : சனி
பலன்கள்: புத்தாண்டின் நாயகனாக சூரியன் திகழ்வதால், மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள். ரத்தம், நரம்புகள் மற்றும் இதயம், சம்பந்தமான நோய்கள் குறையும். மக்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் அதிகரிக்கும். நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள தேச பக்தியினர் பலம் பெறுவார்கள். சந்திரன், மந்திரியாக விளங்குவதால், முத்து, பவழம், நவரத்தினங்கள் ஆகியவற்றின் விலை குறையும். ஆண்டு முழுவதும் நல்ல மழை பெய்யும்.சூரிய பகவான் சேனாதிபதியாக வீற்றிருப்பதால், தேச விரோதிகள் ஒடுக்கப்படுவார்கள். தேச பக்தி அதிகரிக்கும். உலக நாடுகளிடையே பகையுணர்ச்சி மேலிடும். ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரும். பாகிஸ்தானில் உள்நாட்டுக் கலவரங்கள் அதிகரிக்கும். இந்திய – சீன உறவில் நல்ல மாற்றம் ஏற்படும். உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இந்தியா சிறந்த முன்னேற்றத்தைப் பெறும். இந்திய – அமெரிக்க உறவில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்படும். இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிக்கும். மத்திய கிழக்கு நாடுகளான, துபாய், கத்தார், அபுதாபி, சவுதி அரேபியா ஆகியவற்றுடன் வர்த்தகத் தொடர்பு மேம்படும்.
The post விருப்பங்களை நிறைவேற்றுமா விசுவாவசு புத்தாண்டு..? appeared first on Dinakaran.