சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி தம்பதி பலி

திருப்பூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (64). உடல்நலமில்லாத இவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க தனியார் ஆம்புலன்சில் நேற்று முன்தினம் இரவு மனைவி கல்யாணி (60), மகள் பபிதா ஆகியோர் அழைத்து சென்றனர்.

ஆம்புலன்சை கவியரசன் ஓட்டினர். உதவியாக விஜய் என்பவரும் பயணித்துள்ளார். நேற்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் வந்தபோது, சாலையோரம் நின்ற லாரி மீது மோதி முருகன், கல்யாணி ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி தம்பதி பலி appeared first on Dinakaran.

Related Stories: