சுகோய்-30 விமானத்தில் இருந்து வீசப்பட்டது: ‘கவுரவ்’ நவீன குண்டு சோதனை வெற்றி

புதுடெல்லி: சுகோய்-30 விமானத்தில் இருந்து கவுரவ் நீண்டதூர கிளைட் வெடிகுண்டு சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கவுரவ் என்பது விமானத்தில் இருந்து ஏவப்படும் 1,000 கிலோ ரக கிளைட் வெடிகுண்டு. இது இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால்(டிஆர்டிஓ) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த கவுரவ் வெடிகுண்டு சோதனை கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்தப்பட்டது. டிஆர்டிஓ மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் இந்த சோதனைகளை ஆய்வு செய்தனர்.

இந்த சோதனைகளின்போது, 100 கிமீ தூரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது. இதையடுத்து இந்திய விமானப்படையில் இந்த கவுரவ் வெடிகுண்டு சேர்க்கப்பட்டது. இந்த வெற்றிகரமான சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, இந்திய விமானப்படை மற்றும் இதில் தொடர்புடைய தொழில்துறையினரை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.

The post சுகோய்-30 விமானத்தில் இருந்து வீசப்பட்டது: ‘கவுரவ்’ நவீன குண்டு சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: