கேரளாவிலேயே மிக அதிகம் வாகன பதிவு எண் ரூ.46.20 லட்சத்திற்கு ஏலம்

திருவனந்தபுரம்: விலை உயர்ந்த கார்கள் மற்றும் வாகனங்களை வாங்குபவர்கள் தங்களது வாகனத்திற்கு பேன்சியான பதிவு எண்களை வாங்குவது வழக்கம். பேன்சி எண்களுக்கு வட்டாரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே எண்ணுக்கு பல பேர் போட்டி போட்டால் அந்த எண் ஏலத்தில் விடப்படுவது வழக்கம். கேரளாவில் தன்னுடைய காருக்கான பதிவு எண்ணை ஒருவர் ரூ. 46.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்த சம்பவம் நடந்துள்ளது.

எர்ணாகுளம் வட்டா கொச்சியை சேர்ந்த ஒரு சாப்ட்வேர் நிறுவன உரிமையாளரான வேணு கோபாலகிருஷ்ணன் என்பவர் இந்த எண்ணை ஏலத்தில் எடுத்தார். இதுவரை கேரளாவில் இவ்வளவு அதிக தொகைக்கு வாகன பதிவு எண் ஏலத்தில் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2019ல் திருவனந்தபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் KL 01 CK 0001 என்ற பதிவு எண் ரூ. 31 லட்சத்திற்கு ஏலம் போனது. 46 லட்சத்திற்கு பதிவு எண்ணை ஏலத்தில் எடுத்த வேணு பாலகிருஷ்ணனின் லம்போர்கினி காரின் விலை ரூ. 4 கோடியாகும்.

The post கேரளாவிலேயே மிக அதிகம் வாகன பதிவு எண் ரூ.46.20 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: