பத்மநாபசுவாமி கோயில் ஆறாட்டு ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலையம் 11ம் தேதி 4 மணி நேரம் மூடல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் வருடம்தோறும் ஐப்பசி மற்றும் பங்குனி திருவிழா நடைபெறும். இந்த திருவிழா இறுதி நாளில் நடைபெறும் ஆறாட்டு ஊர்வலம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலையத்தின் ஓடுபாதை வழியாக சென்று சங்குமுகம் கடலில் ஆறாட்டு நடைபெறும். இதனால் ஆறாட்டு ஊர்வலம் சென்று திரும்பும் வரை திருவனந்தபுரம் விமானநிலையம் வருடத்தில் இரண்டு முறை மூடப்படுவது வழக்கம்.

இவ்வருட பங்குனி ஆறாட்டு ஊர்வலம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அன்று மாலை 4.45 முதல் இரவு 9 மணி வரை திருவனந்தபுரம் விமானநிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் புறப்படும் மற்றும் வந்து சேரும் விமானங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு நேர விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று திருவனந்தபுரம் விமானநிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பத்மநாபசுவாமி கோயில் ஆறாட்டு ஊர்வலம் திருவனந்தபுரம் விமானநிலையம் 11ம் தேதி 4 மணி நேரம் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: