அவரது மறைவுக்கு ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாக்டே மற்றும் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரம்மகுமாரிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரம்ம குமாரிகள் நிர்வாக தலைவராக தாதி ரத்தன்மோகினியின் வாழ்க்கை தெய்வீக அர்ப்பணிப்புக்கு சான்றாக இருந்தது. தாதிஜியின் பயணம் அமைதி, அன்பு மற்றும் ஞானத்தை பரப்புவதற்காக ஒரு நூற்றாண்டுக்கால அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலித்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பிரம்மகுமாரிகள் தலைவர் தாதி தத்தன்மோகினி காலமானார் appeared first on Dinakaran.