கிளப்புகளுக்கான கூடைப்பந்து தெற்காசிய சாம்பியன் தமிழ்நாடு

சென்னை: தெற்காசிய அளவில் பிரபல கூடைப்பந்து கிளப்களுக்கு இடையிலான முதல் சர்வதேச கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு (இந்தியா), திம்பு மேஜிக்ஸ் (பூடான்), கொழும்பு (இலங்கை), டைம்ஸ் (நேபாளம்), டி-ரெக்ஸ் (மாலத்தீவு) ஆகிய அணிகள் மோதின. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதின. கடைசி நாளில் நடந்த கடைசி லீக் போட்டியில் தமிழ்நாடு 106 – 49 என்ற புள்ளிகள் கணக்கில் டி-ரெக்ஸ் அணியை வீழ்த்தியது.

அதன் மூலம் தான் விளையாடிய 4ஆட்டங்களிலும் வெற்றிப் பெற்ற தமிழ் நாடு, போட்டியின் முதல் சாம்பியன் ஆனது. கடைசி சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வீரர் ஆனந்தராஜ் ஈஸ்வரன் தனி ஒருவராக 20 புள்ளிகள் குவித்தார். அதே போல் 4 ஆட்டங்களில் ஆடி 3ல் வெற்றி பெற்ற கொழும்பு 2வது இடம் பிடித்தது. இப்போட்டியில் தமிழ்நாடு கூடைப்பந்து கிளப், சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் மேற்காசியா கூடைப்பந்து சூப்பர் லீக் பைனலில் விளையாட உள்ள 8 அணிகளில் ஒன்றாக தேர்வாகி உள்ளது.

The post கிளப்புகளுக்கான கூடைப்பந்து தெற்காசிய சாம்பியன் தமிழ்நாடு appeared first on Dinakaran.

Related Stories: