ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை 217 ரன் குவிப்பு: ரிக்கல்டன், ரோகித், சூர்யகுமார், ஹர்திக் அதிரடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானுக்கு எதிராக போட்டியில் மும்பை அணி 217 ரன் குவித்தது. 18வது ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. மும்பை அணியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா – ரயன் ரிக்கல்டன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி 10.1 ஓவரில் 100 ரன்களை எடுத்தனர்.
இந்த ஜோடி 116 ரன்களை சேர்த்த நிலையில், ரயன் ரிக்கலடன் 61 ரன் (38 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி), ரோகித் சர்மா 53 ரன் (36 பந்து, 9 பவுண்டரி) எடுத்து அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தனர்.

அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ராஜஸ்தான் அணி பவுலர்களை பந்தாடினர். இருவரும் சிக்சர், பவுண்டர்களாக பறக்கவிட்டனர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 217 ரன் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 48 ரன் (23 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி), ஹர்திக் பாண்ட்யா 48 ரன் (23 பந்து, 1 சிக்சர், 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் பந்து வீச்சில் ரியான் பராக், மஹீஷ் தீக்ஷனா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 218 ரன் எடுத்தால் என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது.

 

The post ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மும்பை 217 ரன் குவிப்பு: ரிக்கல்டன், ரோகித், சூர்யகுமார், ஹர்திக் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: