* ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைடன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அகமதாபாத்தில் இன்று மோதுகின்றன.
* முதல் ஆட்டத்தில் தோற்ற சுப்மன் கில் தலைமையிலான குஜராத், அடுத்த 3 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை வசப்படுத்தி உள்ளது.
* சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் முதல் 2 ஆட்டங்களில் தோல்வியையும், கடைசி 2 ஆட்டங்களில் வெற்றியையும் பெற்றது.
* இவ்விரண்டு அணிகளுக்கும் இது 5வது லீக் ஆட்டமாகும்.
* இதற்கு முன் இந்த அணிகள் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
* அவற்றில் புதிய அணியான குஜராத் 5 ஆட்டங்களிலும், பழைய அணியான ராஜஸ்தான் ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளன.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக குஜராத் 199, ராஜஸ்தான் 196 ரன் வெளுத்துள்ளன.
* குறைந்தபட்சமாக குஜராத் 177 ரன் குவிக்க, ராஜஸ்தான் 118 ரன் சேர்த்துள்ளது.
* அகமதாபாத் மோடி (படேல்) அரங்கில் இதுவரை 2 ஆட்டங்களில் மட்டுமே மோதி இருக்கின்றன. அவற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளன. இன்று 3வது முறையாக அகமதாபாத்தில் களம் காண உள்ளன.
* இந்த 2 அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய தலா 5 ஆட்டங்களில் 3-1 என்ற கணக்கில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது.
The post ஐபிஎல் போட்டியில் இன்று ஹாட்ரிக் நோக்கி ராஜஸ்தான் வெற்றிக் களிப்பில் குஜராத் appeared first on Dinakaran.