பஞ்சாபில் பயங்கரம் பாஜ தலைவர் வீடு மீது குண்டுவீச்சு: பாகிஸ்தான் சதி என போலீஸ் தகவல்

சண்டிகர்: பஞ்சாபின் ஜலந்தரில் உள்ள சாஸ்திரி மார்க்கெட் அருகே பாஜவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான மனோரஞ்சன் காலியாவின் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை காலியாவின் வீட்டின் மீது மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அவரது வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள், வீட்டின் முன் நின்றிருந்த கார் மற்றும் பைக் உள்ளிட்டவை சேதமடைந்தன. இந்த தாக்குதல் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு டிஜிபி அர்பித் சுக்லா கூறுகையில், ‘‘பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பஞ்சாபில் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்துவதற்காக சதித்திட்டம் தீட்டியுள்ளது. இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து போலீசார் அதனை முறியடித்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் மறறும் ஷாஜாத் பாட்டியின் கூட்டாளியான ஜீஷன் அக்தர் இந்த சதித்திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

The post பஞ்சாபில் பயங்கரம் பாஜ தலைவர் வீடு மீது குண்டுவீச்சு: பாகிஸ்தான் சதி என போலீஸ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: