போபால்: மத்தியப்பிரதேசத்தின் மண்டலா மாவட்டத்தில் பிச்சியா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்தனர். நக்சல்களை பிடிப்பதில் ஏற்பட்ட மோதலை அடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து எஸ்எல்ஆர் துப்பாக்கி, வயர்லெஸ் செட், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
The post ம.பி.யில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.