கேரளா: முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் அணையின் நீர்மட்டம் 113 அடியாக குறைந்துள்ளது.