ஜம்மு எல்லையில் பாக். ராணுவம் ஊடுருவி துப்பாக்கி சூடு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1.10மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியுள்ளது. இதனை பார்த்த இந்திய ராணுவ வீரர்கள் உஷார் அடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் பதிலடி கொடுத்தனர்.

இதில் பாகிஸ்தான் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. எனினும் துப்பாக்கி சூடு மற்றும் அதனை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜம்மு எல்லையில் பாக். ராணுவம் ஊடுருவி துப்பாக்கி சூடு appeared first on Dinakaran.

Related Stories: