தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும்

தொட்டியம், மார்ச் 30: திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபால் சந்திரன், முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் திருவிழா காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது வரும் 1.4. 2025 அன்று திருத்தேர் தலை அலங்காரம் ஏற்றும் முன்பு கீழே வைக்கப்பட்டுள்ள போது சாமி கூண்டின் மீது மாலைகள் போட வேண்டும், தலையலங்காரம் ஏற்றியவுடன் உள் கரணை, நெட்டி மாலை, சேலைகள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு தேர் முழுமையாக கட்டப்படும் வரை தேரின் மீது ஏறி மாலைகள் போடக்கூடாது எனவும் 3.4. 2025 அன்று திருத்தேரானது கோவிலில் இருந்து வீதி உலா புறப்படும் நேரம் மாலை 4 மணி எனதீர்மானிக்கப்படுவது , அருள்மிகு மதுரை காளியம்மன் கோயில் வீதி உலா செல்லும் அனைத்து இடங்களிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வீடியோ பதிவு செய்வது, தொட்டியம் வட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையினை திருவிழா நாட்களில் மூடக்கோரி காவல்துறையினர் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து திருவிழா நடைபெறும் நாட்களில் விடுப்பு அளிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்வது, விழா நாட்களில் எந்த ஒரு சாதி சமய வேறுபாடு இல்லாமல் அமைதியான முறையில் திருவிழா கொண்டாடப்படவும், உயர்நீதிமன்ற உத்தரவின் படி எந்த ஒரு சாதி மத கொடிகள், சின்னங்கள் மற்றும் பதாகைகள் வைக்க அனுமதி இல்லை என்றும் அறிவுறுத்தப்பட்டது, சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் மற்றும் சாதிய உணர்வுகளை தூண்டும் வாசகங்கள், படங்கள் கொண்ட பனியன்கள், தொப்பிகள் அணிந்து விழாவில் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது,

திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் கடைகள் அமைப்பதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு சட்டம் ஒழுங்கினை பாதுகாக்கும் பொருட்டும். திருவிழாக்கடைகளை சிவன் கோயில் அருகில் உள்ள மைதானத்தில் மட்டுமே அமைத்திட தீர்மானிக்கப்பட்டது, இதனைத் தவிர்த்து சிவன் கோயில் அருகில் சாலைகளில் எக்காரணத்தை முன்னிட்டும் கடைகள் அமைக்கக்கூடாது,

திருவிழா நாட்களில் தொட்டியம் பேரூராட்சியின் சார்பில் அதிகளவு நடமாடும் கழிப்பறைகளை அமைப்பது, வானவேடிக்கை நடைபெறும் நாள் அன்று இரண்டு தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் நிறுத்தி வைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது அதனை தொடர்ந்து திருச்சி போலீஸ் எஸ் பி செல்வ நாகரத்தினம் பேசும்போது திருவிழா காலங்களில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான வசதிகளை காவல்துறை ஏற்படுத்தி தரும். அதே வேலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான முன்னெடுப்பையும் மேற்கொள்ளும். சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வரைமுறைகள் கடைபிடிக்கப்படும், ஒழுங்குபடுத்தப்பட்ட வரையறைக்குள் செயல்படுவதால் தான் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட சிறப்பாக இருப்பதற்கான காரணம். சட்டம், ஒழுங்கு பாதித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,

பொது மக்களின் வழிபாடு ,மத உணர்வு, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு காவல்துறை மதிப்பளிக்கும்.
மக்கள் முழு மகிழ்வுடன் திருவிழாவைகொண்டாடுவது தான் காவல்துறையின் நோக்கம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு வேண்டும். கடவுள் வழிபாடு சிறப்பாக இருக்கட்டும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும். பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும்,முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக தனி போலீஸ் படையினரால் கண்காணிக்கப்படும் என்று பேசினார்.பொதுமக்கள் தரப்பில் காவல்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றி விழா சிறக்க ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தனர்.கூட்டத்தில் தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த்,செயல் அலுவலர் விஜய்,பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஷ்,கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: