திருச்சி,மார்ச் 30: தற்கொலைக்கு தூண்டியதாக டான்ஸ் மாஸ்டரை போலீசார் செய்தனர். திருச்சியை சேர்ந்தவர் 38 வயது இளம்பெண். திருமணமாத இவருக்கு டான்ஸ் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் இருந்ததால் சமூக வலைத்தளங்களில் டான்ஸ் கற்றுக் கொள்வதற்கு இடம் தேடினார். அப்போது, தில்லைநகர் பகுதியில் இருப்பதை கண்டு அங்கு டான்ஸ் கற்றுக் கொள்வதற்காக சென்றார். அப்போது டான்ஸ் மாஸ்டர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மன உளைச்சலில் இருந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கு தூண்டியதாக ஹரி பிரசாந்த் (31) என்ற வாலிபரை செய்தனர்.
The post இளம்பெண்னை தற்கொலைக்கு தூண்டியதாக டான்ஸ் மாஸ்டர் கைது appeared first on Dinakaran.