இத்தகைய துணை மின் நிலையங்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீப்பொறியினால் காய்ந்த புற்கள் எரிந்து தீ வேகமாக பரவி முக்கியமான மின் அடிப்படை அமைப்புகள் மற்றும் சாதனங்கள் சேதமடைந்து மின் விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவ்வாறு நிகழும் சம்பவங்களால் மின் விநியோகத்திற்கும், துணைமின் நிலைய பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக இருக்கும்.
அதன் அடிப்படையில், கூடுதல் தலைமைச் செயலாளர்/ தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., மற்றும் இயக்குநர் பகிர்மானம் திரு. அ.ரா. மாஸ்கர்னஸ் ஆகியோர் தொடர்ந்து பல்வேறு துணைமின் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை வழங்கி, மாநிலம் முழுவதும் துணைமின் நிலையங்களில் மேற்கண்ட பணிகளை உடனடியாக செய்து முடிக்குமாறு வலியுறுத்தினார். அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள 1,754 துணைமின் நிலையங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் புற்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது, இதனால், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தடையற்ற மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.