சென்னை: தமிழர் விரோத போக்குடன் பிரதமர் மோடி நடப்பதால்தான் அவர் தமிழ்நாடு வரும்போது எதிர்க்கிறோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கல்வி நிதி மறுப்பது, மீனவர் நலனை காக்க தவறுவது போன்ற தமிழர் விரோத போக்குடன் நடக்கிறார் பிரதமர் என அவர் தெரிவித்தார்.