சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, CMRL உதவி எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏதேனும் புகார்கள் இருந்தால், customercare@cmrl.in என்ற முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உடனடி உதவிக்கு, அருகிலுள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளவும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.
சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் சுரங்கம் தோண்டி அமைக்கப்பட்டுள்ளன.
மேல்வாரியாக, இத்திட்டம் “சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை” ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் டெல்லி மெட்ரோ திட்டத்தை ஒத்திருக்கும். இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் நீல வழித்தடம், பச்சை வழித்தடம் என இரு வழித்தடங்களில் சேவையினை வழங்குகின்றன
இந்நிலையில் மெட்ரோ ரயில் உதவி எண்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, CMRL ஹெல்ப்லைன் எண்கள் தற்காலிகமாக வேலை செய்யவில்லை. சீரமைப்பு பணி நடந்து வருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏதேனும் புகார்களுக்கு, customercare@cmrl.in இல் எங்களைத் தொடர்பு கொள்ளவும். உடனடி உதவிக்கு, அருகில் உள்ள நிலையக் கட்டுப்பாட்டாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் உதவி எண் தற்காலிகமாக வேலை செய்யாது: மெட்ரோ நிர்வாகம் appeared first on Dinakaran.