கோவை, மார்ச் 28: கோவை மதுக்கரை பகுதியில் வசிக்கும் ஒருவர் இரும்பு வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி இவரது கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஒரு இணையதளம் மூலம் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டு 14.72 லட்ச ரூபாய் செலுத்தியுள்ளார்.
அதன் பிறகு புகார்தாரர் தான் மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்து விட்டதாக அறிந்துள்ளார். இந்நிலையில் பணத்தை இழந்தவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பணம் மோசடி செய்தது சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் (43) என தெரியவந்து. இவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் தமிழ்நாட்டில் மதுரை மற்றும் ஈரோடு, ஹரியானா, பெங்களூர், மும்பை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வர்த்தக மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் போலீசில் இவர் மீது வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது, இவரின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்த லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post இரும்பு வியாபாரிடம் ஆன்லைனில் ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.