சூலூர், மார்ச் 28: கோவை சூலூர் பள்ளி வாசலில் ஏழை இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார். இந்நிகழ்வில், சூலூர் பேரூர் கழக செயலாளர் கௌதமன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேசு, பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், பேரூர் கழக நிர்வாகிகள் பன்னீர்செல்வம், மணி, கற்பகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சாப்ரா, பேரூர் கழக மகளிர் அணி அமைப்பாளர் தங்கமணி, கலங்கல் சிவக்குமார், கண்ணம்பாளையம் பாலு, சிடிசி சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நிஜாம், அல்தாப், சூலூர் ஜமாத் தலைவர் கலீல் ரகுமான், மாணவர் அணி மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post ரம்ஜானையொட்டி ஏழை இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.