ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன:
*கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன
*ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
*ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
*நகரங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில், தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள்
* குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, நகர அமைப்பு என எண்ணற்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
* திமுக அரசு அமையும் போதெல்லாம் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் நகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது.
* 420 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
*ரூ.830 கோடியில் 100 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது.
திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது
திருச்சி காந்தி மார்கெட் இடம் மாற்றப்படாது என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு உறுதி அளித்தார். திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். காந்தி மார்கெட்டை சீர் செய்து, பெரிதுபடுத்துவதற்காக ரூ.50 கோடியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். என தெரிவித்தார்.
சாலை பணிகள்
*1280 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளாட்சி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன
*ரூ.328 கோடியில் உள்ளாட்சி அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
*தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வருகின்றன.
*ரூ.3000 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற மையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் எங்கேயும் மூடப்படவில்லை
*அம்மா உணவகம் எங்கேயும் மூடப்படவில்லை. சென்னையில் பருவமழை காலத்தில் பொது மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் தான் உணவு அளிக்கப்படுகிறது.மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
ராமநாதபுரம், பெரம்பலூர் மாநகராட்சியாக்க நடவடிக்கை
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 530 எம்எல்டி நீர் வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது.
21 நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணி.
கரூர், கும்பகோணம், தாம்பரம், நெல்லை ஆகிய மாநகராட்சிகள், 21 நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டு பணிகள். ரூ.704 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்படும். திருச்செங்கோடு, உடுமலை, பழனி ஆகிய 3 தேர்வு நிலை நகராட்சிகளை, சிறப்பு நிலை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.
கழிவு நீர் கட்டமைப்புகள் புனரமைப்பு
கோடை காலத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
புதிய பேருந்து நிலையங்கள்:
கும்பகோணம் மாநகராட்சி, அம்பாசமுத்திரம், ஆம்பூர், கள்ளக்குறிச்சி, சாத்தூர், செங்கல்பட்டு, திருக்கோவிலூர், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் ரூ.142.68 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் மேலும் பாலப்பள்ளம், நாட்டரசன்கோட்டை, புதுப்பாளையம், ஆரணி, குன்னத்தூர், உடன்குடி, ஏர்வாடி, கும்மிடிப்பூண்டி, பரமத்தி, திருபுவனம், பருகூர் ஆகிய 11 பேரூராட்சிகளிலும் ரூ.49 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். திருச்செந்தூர். ஆற்காடு, ராணிப்பேட்டை நகராட்சிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் கூடுதல் பணி. தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் மேலும் 100 ஜெட் இயந்திரம் வாகனம் வழங்கப்படும். ரூ.6,986 கோடியில் 42 பாதாள சாக்கடை மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.0
சிங்கார சென்னை 2.0 மூலம் இதுவரை ரூ.966 கோடி மதிப்பீட்டில் 1048 வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டது. மெரினா கடற்கரை ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
சென்னையில் ரூ.42 கோடியில் உள்விளையாட்டு அரங்கம்
சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ரூ.45 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். சென்னையின் மையப்பகுதிகளில் உள்ள மிகவும் பழமையான கழிவு நீர் கட்டமைப்புகள் முதல் கட்டமாக ரூ.740 கோடியில் புனரமைக்கப்படும். சென்னை மாநகராட்சி பூங்காக்கள், பொது இடங்களில் ரூ.52 கோடியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். சென்னை மாநகராட்சியில் ரூ.75 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
பேருந்து நிலையங்கள் மேம்பாடு:
கடலூர், தஞ்சாவூர், ஆரணி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், காரமடை, கிருஷ்ணகிரி, குடியாத்தம், கொமாரபாளையம், கோவில்பட்டி, திருவாரூர், துறையூர், தேனி, அல்லிநகரம், பட்டுக்கோட்டை, பல்லடம், பொன்னேரி, முசிறி, விருதுநகர்
புதிய சந்தைகள்:
தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஆத்தூர், திருத்துறைப்பூண்டி, தேவகோட்டை, புஞ்சைப் புளியம்பட்டி, பெரியகுளம், திருவாரூர்
சந்தைகள் புதுப்பித்தல்:
திருச்சி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், முசிறி, மேட்டூர், கோபி, வாலாஜாப்பேட்டை
புதிய நவீன இறைச்சிக்கூடங்கள்:
கடலூர், இராமநாதபுரம், காயல்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவத்திபுரம், பரமக்குடி, விழுப்புரம்
புதிய நவீன எரிவாயு தகன மேடைகள்:
கடலூர், ஓசூர், தூத்துக்குடி, தாம்பரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், உதகை, மறைமலைநகர், பெரம்பலூர், அரியலூர், திருவத்திபுரம்
புதிய பாதாள சாக்கடை வசதி:
தென்காசி, இராணிப்பேட்டை
ரூ.27 கோடியில் 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.27.26 கோடியில் 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ரூ.311.78 கோடியில் 69,500 -புதிய எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்படும். வால்பாறையில் ரூ.6 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்தம் மற்றும் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். வால்பாறை நகராட்சியில் ரூ.9 கோடியில் வணிக வளாகம் அமைக்கப்படும்.
விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையம்
நகர்ப்புற உள்ளாட்சிகளில் விலங்கு இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக விலங்கு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். நாய்க்கடி பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து நகரங்களிலும் நாய்களுக்கான கருத்தடை மையம் அமைக்க இடம் தேர்வு செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மானியக் கோரிக்கையில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
சென்னையில் மேலும் 30 பூங்காக்கள்
கே.என்.நேரு சென்னை மாநகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பில் மேலும் 30 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாநகராட்சிகளில் ரூ.48 கோடியில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டப்படும். பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள் ரூ.52.26 கோடியில் சீரமைக்கப்படும்.
பாதாள சாக்கடை அமைக்க ரூ.800 கோடி ஒதுக்கீடு
தாம்பரம், விருதுநகரில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்டமாக ரூ.800 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் ரூ.200 கோடியில் நடைபாதைகள்
சென்னையில் 200 கி.மீ. நீளத்துக்கு ரூ.200 கோடியில் நடைபாதைகள் அமைக்கப்படும். ரூ.95 கோடியில் ஓட்டேரி, விருகம்பாக்கம் கால்வாய்கள் தடுப்புச் சுவர் அமைத்து உயர்த்தப்படும். சென்னையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ.52 கோடியில் பூங்காக்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்
The post கடந்த 4 ஆண்டுகளில் 10 மாநகராட்சிகள், 31 நகராட்சிகள் புதியதாக உருவாக்கப்பட்டுள்ளன: மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு பதிலுரை appeared first on Dinakaran.