அறந்தாங்கியில் புதிய காவல் நிலையம் அமையுமா என்று உறுப்பினர் ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டுகளில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் பார்த்தால் புதிய காவல் நிலையம் அமைக்க அவசியம் எழவில்லை
சென்னை அயப்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு முன்வருமா என உறுப்பினர் கணபதி கேள்வி எழுப்பினார். அயப்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கோவை சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு நிரந்தர கட்டடம் கட்ட இடம் கண்டறியப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி கேள்விக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில் அளித்தார்.
காவல் நிலையம் வேண்டும், தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கோரியுள்ளனர். அதற்கு 72 காவல் நிலையம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 23 தீயணைப்பு நிலையங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சாத்தியக்கூறு அடிப்படையில் புதிய காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மானியக் கோரிக்கையில் உறுப்பினர்கள் திருப்தி அடையும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
The post சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.