2026 மார்ச் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் : அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

சென்னை : 2026 மார்ச் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி வெளியிட்ட ஊரகவளர்ச்சித்துறை அறிவிப்புகள் பின்வருமாறு..

*2026 மார்ச் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும். நடப்பாண்டில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்.

*ரூ.500 கோடியில் சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு பணி அரசு நிதி மூலம் மேற்கொள்ளப்படும்.கிராமப்புற சாலை திட்டம் மூலம் 20,000 கி.மீ. சாலைகள் நடப்பாண்டுக்குள் அமைக்கப்படும்.

*2,400 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,195 கோடியில் மேம்படுத்தப்படும். 1,300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் 2 மாத காலத்துக்குள் வெளிப்படைத்தன்மையோடு நிரப்பப்படும்.

*500 சுய உதவிக்குழு உறுப்பினர்களை வங்கிகளில் வணிக தொடர்பாளர் தோழிகளாக பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,557 கோடியில் 6,112 கி.மீ. சாலைகள் சீரமைக்கப்படும்.

*அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டு வந்த சமத்துவபுரம் திட்டம் 50 ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும்.

*கிராமப்புறங்களில் 1200 புதிய நீர்தேக்க தொட்டிகள் கங்கப்படும். நீர்த்தேக்க ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு வஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

*500 கிராம ஊராட்சிகளுக்கு அலுவலகக் கட்டிடங்கள் ரூ.157 கோடியில் புதிதாக கட்டப்படும். ரூ.61 கோடியில் ஊரசுப் பகுதிகளில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும்.

*ஊரகப் பகுதிகளில் இயற்கை மற்றும் நீர்வள பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள மண் சாலைகள் ரூ.150 கோடியில் ஓரடுக்கு கப்பி சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

*10 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் இந்தாண்டு புதிதாக கட்டித் தரப்படும். ஊரகப் பகுதிகளில் ரூ.800 கோடியில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 278 மலைக் கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதியாக ரூ.30 கோடி வழங்கப்படும்.

*ஊரகப் பகுதிகளில் உள்ள தெருக்கள், சந்துகளை மேம்படுத்தும் பணி ரூ.350 கோடியில் மேற்கொள்ளப்படும். ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் குழந்தை நேய வகுப்பறைகள் ரூ. 182 கோடியில் கட்டப்படும். வன உரிமைச் சட்டத்தை சிறப்பாக செயல்படும் கிராமத்திற்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.

The post 2026 மார்ச் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும் : அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: