பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்

 

பெரம்பலூர், மார்ச் 24: திமுக தலைமைக்கழக அறிவிப்பிற் கிணங்க, பெரம்பலூர்மாவட்டத்திற்கு உட்பட்டபகுதிகளில், பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று திமுகவினருக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

திமுக அறிவிப்பிற்கிணங்க, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திமுக கொடிக்கம்பங்களை, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய,நகர, பேரூர், வார்டு மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தங்களது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ் சாலை, மாநில நெடுஞ் சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களிலும்,பொது இடங்களிலும் வைத்துள்ள திமுக கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றிட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட கொடிக் கம்பங்களின் விவரங்களை மாவட்ட திமுகவிற்கு தெரியப் படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

The post பொது இடங்களில் உள்ள கொடி கம்பங்களை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: