பெரம்பலூர், மார்ச் 24: பெரம்பலூரில் நகர திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக நடந்த இப்தார் ரமலான் நோன்பு பெருவிழாமற்றும் சமூக நல்லிணக்க விழாவில் திமுக மாவட்ட செயலாளர், எம்எல்ஏ கலந்து கொண்டனர். பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள மக்கா பள்ளி வாசலில், நகர திமுக சிறுபான்மையினர் அணி, 13வதுவார்டு திமுக மற்றும் மக்கா பள்ளி இளைஞர்கள் சார்பில் இப்தார் ரமலான் நோன்பு பெருவிழா மற்றும் சமூக நல்லிணக்க விழா நேற்று நடைபெற்றது. நகர திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் ஹிதாயத் வுல் ஹக் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெகதீசன், மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் குன்னம் இராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாக ரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட திமுக சிறுபான்மையினர் அணி அமைப் பாளர் அப்துல் பாரூக், பெரம்பலூர் நகர துணை செயலாளர் சபியுல்லா,மக்கா பள்ளி வாசல் தலைவர் காதர்ஷெரீப், செயலாளர் சம்சுதீன், துணைச் செயலாளர் முபாரக் ஷெரிப், மக்கா பள்ளி வாசல் நிர்வாகி பீர் முகமது, பாபு,சாகுல்ஹமீது, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், 13வது வார்டு கவுன்சிலர் நல்லு சாமி, 18வது வார்டு செயலாளர் அஜீத் மற்றும் மாவட்ட, நகர நிர் வாகிகள், பல்வேறு சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மக்கா பள்ளி இளைஞரணி நிர்வாகிகள் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் மக்கா பள்ளி வாசலில் இப்தார் ரமலான் நோன்பு பெருவிழா appeared first on Dinakaran.