பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேச தொடங்கும் போது, கூட்டத்தில் இருந்த பாஜ கட்சியினர் இருக்கையில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர். கூட்டம் தொடங்கும் போது, கட்சியினருக்கு போடப்பட்டிருந்த சேர்கள் காலியாக இருந்தது. மேலும், பாஜ தலைவர் அண்ணாமலை பேசும் போது கலைந்து சென்ற கூட்டத்தை தினகரன் புகைப்படக்காரர் சுந்தர் படம் பிடித்தார். இதை பார்த்தை பாஜ கட்சியினர், புகைப்படக்காரையும், முன்னணி தொலைக்காட்சி நிருபரையும் அடித்து உடைத்தனர். மேலும் அவரது கேமராமிராவை பறித்து உடைத்தனர். இதில் காயமமைந்த 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
The post அண்ணாமலை பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் மீது பாஜவினர் பயங்கர தாக்குதல் appeared first on Dinakaran.