சென்னை: பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்தான் தொகுதி மறுசீரமைப்பு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென் இந்தியாவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 30%-லிருந்து 20%-ஆக குறையும். தற்போதைய நிலையில் தொகுதி மறுவரையறை செய்தால் 7 மாநிலங்களுக்கும் சேர்ந்து 44 தொகுதிகள் குறையும். தற்போதைய சூழலில் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
The post பாஜக ஆளாத மாநிலங்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் – துணை முதல்வர் appeared first on Dinakaran.