அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளர விண்ணப்ப பதிவுக்கு ஒரே அனுமதி: ஆ.ஹென்றி வலியுறுத்தல்

சென்னை: பெய்ரா அமைப்பினர் தலைவர் ஆ.ஹென்றி அறிக்கை: தமிழ்நாட்டில் தற்போது மனைப் பிரிவு, மனை உட்பிரிவு, கட்டிட அனுமதி, நில மறுவகைபாடு மாற்றம் உள்பட பல்வேறு பிரிவுகளுக்கான அனுமதி பெறுவதற்கு ஆர்க்கிடெக்ட், பதிவுபெற்ற கட்டிட பொறியாளர்கள், உரிமம் பெற்ற கட்டிட அளவையர் ஆகியோரை பொதுமக்கள் அணுகுகின்றனர். சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள், அரசின் சட்ட விதிகளின்படி திட்ட அனுமதி வரைபடங்களை தயாரித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, சிஎம்டிஏவின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாக, ஒற்றை சாளர முறையில் சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றி, தனித்தனியே அனுமதி பெற்று தருகின்றனர்.

எனினும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019ன்படி, மாநிலம் முழுவதிலும் ஒற்றை சாளர முறையில் ஒரே இணையதள முகவரி மூலம் உடனடி அனுமதி பெறும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து தமிழ்நாடு அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயல்படுத்தி வருகிறது. இதற்காக அந்தந்த துறைகளில் தனித்தனியே அனுமதி பெறுவதில் நீண்ட காலதாமதமாகி வருகிறது.

இவற்றை தவிர்க்க, தற்போது சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி உள்பட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒற்றை சாளர முறையில் நிலம், மனை, கட்டிடம் தொடர்பான பல்வேறு பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரே முறையில் உடனடி அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் வழிவகை செய்ய வேண்டும்.

The post அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஒற்றை சாளர விண்ணப்ப பதிவுக்கு ஒரே அனுமதி: ஆ.ஹென்றி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: