சென்னை: தமிழ்நாடு சுற்றுலாத்துறை முதல் முறையாக தமிழ்நாடு பயண சந்தை-2025 மார்ச் 21 முதல் 23 வரை நடத்தவுள்ளது. இந்த பயண சந்தையில் சுமார் 100க்கும் மேற்பட்ட சட்டழல்கள் அமைக்கப் பெற்று மாநிலத்தின் வளமான, மாறுபட்ட சுற்றுலா வாய்ப்புகளை வெளிப்படுத்தவும், சுற்றுலா தொழில் வளர்க்கவும், சுற்றுலாத்துறை முதலீடுகளை ஈர்க்கவும் இந்நிகழ்வு ஒரு முதன்மை தளமாக செயல்படும். இந்த நிகழ்வில், பயண ஏற்பாட்டாளர்கள், பயண முகவர்கள், விருந்தோம்பல் வல்லுநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட உள்நாடு மற்றும் சர்வதேச சுற்றுலா தொழில் முனைவோர் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைத்து மாநிலத்தின் விரிவான சுற்றுலா வாய்ப்புகளை கண்டறியும். பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, ஆரோக்கிய சுற்றுலா மற்றும் கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் போன்ற முக்கிய பிரிவுகளில் வளர்ந்து வரும் போக்குகள், பிராந்திய மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஈர்க்கும் வண்ணம் இந்த நிகழ்வு அமைய உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சுற்றுலாத்துறை சார்பில் முதல்முறையாக தமிழ்நாடு பயண சந்தை appeared first on Dinakaran.