நெல்லை: நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாஹிர் உசேன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜாஹீர் உசேன் கொலையில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.