மாடு, நாயை கொன்றது…
இந்நிலையில், புலியைப் பிடிக்க வனத்துறையினர் கடந்த சில நாட்களாக டிரோன் மூலம் தேடி வந்தனர். நேற்று காலை வனக்காவலர் குழுவினர் மயக்க ஊசி போட்டு புலியை பிடிக்க முயன்றனர். ஆனால், புலி தனது இருப்பிடத்தை மாற்றியதாக கூறப்படுகிறது. புலியை கண்டறிய தேக்கடியில் இருந்து ஜெபி என்னும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் புலியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து வனத்துறையினர் நேற்று மாலை தேடுதல் வேட்டையை நிறுத்தினர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் வண்டிப்பெரியார் பகுதியில் உள்ள அரணக்கல் தோட்டத்தில் இறங்கிய புலி, நாராயணன் என்பவருக்கு சொந்தமான பசுவையும், பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான நாயையும் கொன்றது. இதையடுத்து சம்பவ இடத்தில் வனக்காவலர் குழு முகாமிட்டுள்ளது. புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கோட்டயம் மாவட்ட வனத்துறை அதிகாரி ராஜேஷ் தெரிவித்துள்ளார். புலி நடமாடுவதால், வண்டிப்பெரியார் பகுதி மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
The post இன்று அதிகாலை மாடு, நாயை அடித்துக் கொன்றது: வண்டிப்பெரியார் பகுதியில் புலி நடமாட்டம் appeared first on Dinakaran.