தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கூட மிதமான மழை பெய்தது. அதேநேரம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இன்னும் வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்றே வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெயில் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தில் இன்று முதல் வரும் 22ம்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 3 செ.மீ., சிற்றாறு, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்சமாக சேலத்தில் 99 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. மார்ச் 25ம் தேதி வரை வெப்பநிலை உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் இன்று வெப்பம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: