விண்வெளியில் 10 மாதமாக சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார்: ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் புறப்பட்டது

கேப் கனாவெரல்: விஅமெரிக்காவின் போயிங் நிறுவனமும், நாசாவும் இணைந்து தயாரித்த புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தின் சோதனை விமானிகளாக இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் கடந்த ஜூன் 5ம் தேதி விண்வெளிக்கு சென்றனர். ஹீலியம் கசிவு உள்ளிட்ட கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் தொடர்ந்து தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வரும் நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டன.

இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் க்ரூ-10 விண்கலம் நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதில், அமெரிக்காவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள், ஜப்பான் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த தலா ஒரு வீரர்கள் உட்பட 4 பேர் அனுப்பப்பட்டனர்.
இவர்கள், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், வில் மோர் உட்பட 4 பேருக்கு பதிலாக அடுத்த 6 மாதங்கள் அங்கு தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்வார்கள். டிராகன் க்ரூ-10 விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரும் அடுத்த வாரம் பூமிக்கு திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post விண்வெளியில் 10 மாதமாக சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புகிறார்: ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் புறப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: