மனிதன் விண்வெளியில் நடந்து 60 ஆண்டுகள் நிறைவு: 480கி.மீ. உயரத்தில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ்!!

ரஷ்யா: மனிதன் விண்வெளியில் நடை மேற்கொண்டு இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1965ம் ஆண்டு இதே நாளில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோவ் விண்வெளி நடை மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை மேற்கொண்டார். 1965 மார்-18 விண்வெளி அறிவியலில் மனித இனம் புதிய வரலாற்று சாதனை படைத்தது. சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ரஷ்ய வீரர் அலெக்ஸி லியோனோவ் விண்வெளியில் முதன்முதலாக நடந்து சாதனை படைத்தார்.

பூமியில் இருந்து 480 கிலோ மீட்டர் உயரத்தில் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த அலெக்ஸை விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அலெக்ஸி விண்கலத்துடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு மூலம் 24 நிமிடங்களை விண்வெளியில் செலவிட்டார். பல்வேறு விண்வெளி பயணங்களுக்கு பிறகு அலெக்ஸி லியோனோவ் 2019ம் ஆண்டு தனது 85 வயதில் மறைந்தார். இன்றைய நவீன யுகத்தில் விண்வெளியில் வீரர்கள் நடப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டாலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி லியோனோவ் மேற்கண்ட முதல் விண்வெளி நடை விண்வெளி வரலாற்றில் என்றும் அழிக்கமுடியாத அடையாளம் என்பது நிதர்சனம்.

The post மனிதன் விண்வெளியில் நடந்து 60 ஆண்டுகள் நிறைவு: 480கி.மீ. உயரத்தில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ்!! appeared first on Dinakaran.

Related Stories: