சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை ரூ.2.78 லட்சம் கோடிக்கு வாங்கும் கூகுள் நிறுவனம்

நியூயார்க்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்களால் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கப்பட்டது விஸ் என்று பெயரிடப்பட்ட கிளவுட் சைபர் பாதுகாப்பு நிறுவனம். இது ஆரம்பிக்கப்பட்ட சில நாள்களிலேயே சைபர் பாதுகாப்புத்துறையில் அதீத வளர்ச்சி அடைந்து சைபர் பாதுகாப்புத்துறையில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தது. இதையடுத்து பல்வேறு பெரிய முதலீட்டு நிறுவனங்கள் விஸ் நிறுவனத்தில் முதலீடுகளை குவித்தன. விஸ் நிறுவனத்தை வாங்க கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அப்போது ரூ.2 லட்சம் கோடி என கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டதால் முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் விஸ் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஆல்பாபெட் ஈடுபட்டுள்ளது. தற்போது விஸ் நிறுவனத்தை ரூ.2,78,000 கோடி மதிப்பீட்டில் கூகுள் வாங்க உள்ளது. இது முன்பு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலையை விட பன்மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை ரூ.2.78 லட்சம் கோடிக்கு வாங்கும் கூகுள் நிறுவனம் appeared first on Dinakaran.

Related Stories: