வீரகனூர் அருகே கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கெங்கவல்லி, மார்ச் 11: வீரகனூர் அருகே, புளியங்குறிச்சி கிராமம் நேரு நகரில் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை, மூன்று கால பூஜை செய்து கோபுரத்தின் உச்சியில் கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் புளியங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post வீரகனூர் அருகே கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: