இந்திய கம்யூ., கட்சி மாநாடு

ஜலகண்டாபுரம், மார்ச் 5: நங்கவள்ளி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 29வது மாநாடு ஜலகண்டாபுரத்தில் நடந்தது. மாநாட்டிற்கு வெங்கடாஜலம், சின்னதம்பி, விஜயமாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜலகண்டாபுரம் நகர செயலாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் கலந்துகொண்டு பேசினார். மாநாட்டில் வேலையறிக்கை, வரவு-செலவு, விவாதம், தொகுப்புறை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் பழ.ஜீவானந்தம், துணை செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் அருணாச்சலம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய கம்யூ., கட்சி மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: