மதுக்கரை, மார்ச் 5: கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சி குளம் அருகே உள்ள போத்தனூர் பிரிவு பகுதியில் போக்குவரத்து சிக்னலை அகற்றிவிட்டு அங்கு ரவுண்டானா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது அதிகளவில் புழுதி பறந்து வருவதால், வாகன ஓட்டிகளும், அப்பகுதி வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலரும், திட்டக்குழு உறுப்பினருமான காதரை நேரில் சந்தித்து நிலைமையை எடுத்து கூறினர்.
இதனைத்தொடர்ந்து நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரி ராஜா உள்ளிட்டோரை போத்தனூர் பிரிவுக்கு அழைத்து வந்த காதர், பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்து எடுத்துக்கூறி, பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று கூறியதோடு, அடிக்கடி தண்ணீர் தெளித்து புழுதி பறப்பதை தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதனைத்தொடர்ந்து ரவுண்டானா அமைக்கும் பணியை விரைவாக செய்து முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
The post போத்தனூர் பிரிவில் ரவுண்டானா அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளிடம் திமுக கவுன்சிலர் வேண்டுகோள் appeared first on Dinakaran.