பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வூசூ போட்டி

 

கோவை, மார்ச் 10: இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வூசூ போட்டி சண்டிகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 143 பல்கலையில் இருந்து மொத்தம் 1500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், கோவை பாரதியார் பல்கலை சார்பாக மாணவிகள் பால ஹர்ஷினி, பவ தாரணி மற்றும் ஹரிகரன் ஆகியோர் சினியர் பிரிவில் பங்கேற்று இருந்தனர்.

பெண்களுக்கான பிலெக்ஸிபில் வெப்பன் பிரிவில் மாணவி பால ஹர்ஷினி உள்பட 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  இதில் மாணவி பால ஹர்ஷினி மொத்தம் 6.50 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு பிரிவான தாய்ஜிகுவான் பிரிவில் மாணவி பவதாரணி பங்கேற்று 7 புள்ளிகள்பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார்.

The post பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வூசூ போட்டி appeared first on Dinakaran.

Related Stories: