தடைதாண்டுதல் போட்டியில் கோவை மாணவி சாதனை

 

கோவை, மார்ச் 10: 6வது மாநில அளவில் இளைஞர்களுக்கான தடகளப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த தடகள வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் கோவை மாவட்டம் சார்பாக நீல் சாம்ராஜ், அபிநயா, அஷ்வினி, சந்தியா ஆகியோர் பங்கேற்றனர். 18 வயது உட்பட்டோருக்கான பிரிவில் மாணவன் நீல் சாம்ராஜ் 100மீ ஓட்டத்தில் வெள்ளியும், 200மீ ஓட்டத்தில் தங்கமும் வென்றார். மாணவி அபிநயா 100மீ தடை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மாவட்ட 23 வயது உட்பட்டோருக்கான 400மீ தடை தாண்டுதல் போட்டியில் 63 வினாடிகளில் கடந்து சாதனை படைக்கப்பட்டிருந்தது. 23 வயது உட்பட்டோருக்கான 400மீ தடைதாண்டுதல் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவி அஷ்வினி பங்கேற்றார். 400மீ தடைதாண்டுதலை அஷ்வினி 61 வினாடிகளில் முடித்து முன்பு இருந்த சாதனையை முறியடித்தார். 400மீ ரிலே போட்டியில் அஷ்வினி தங்கம் வென்றார். தொடர்ந்து, 1600மீ ரிலே போட்டியில் மாணவி சந்தியா பங்கேற்று தங்கம் வென்றார். வெற்றி பெற்ற கோவை மாவட்ட வீரர்களை பயிற்சியாளர் வேல் முருகன் வாழ்த்தினார்.

The post தடைதாண்டுதல் போட்டியில் கோவை மாணவி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: