அன்னூர்,மார்ச்13: கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளுடன் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கமலக்கண்ணன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் உதவி இயக்குனர் கமலக்கண்ணன் பேசுகையில்: வரி வசூலில் பல ஊராட்சிகள் பின்தங்கியுள்ளன. பின் தங்கியுள்ள ஊராட்சிகளுக்கு நோட்டீஸ் தரப்படும். வரி வசூலை தீவிர படுத்த வேண்டும்.
வரி வசூலுக்கு சிறப்பு முகாம் நடத்த வேண்டும். வரி வசூலில் மிகவும் பின்தங்கியுள்ளவர்கள் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை வரும். மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்து தினமும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றார். காணொலி காட்சியில் பங்கேற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் வரிவசூலை தீவிரப் படுத்துவதாக உறுதி அளித்தனர்.
The post வரி வசூலை தீவிர படுத்த உதவி இயக்குனர் அறிவுரை appeared first on Dinakaran.