×

ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு விவசாயிகளுடன் மோடி பேச வேண்டும்: பிரியங்கா காந்தி காட்டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு விவசாயிகளுடன் பேச வேண்டும் என்று பிரியங்கா காந்தி காட்டமாக பதிவிட்டுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஒன்றிய அரசுக்கு எதிராக பஞ்சாப் எல்லையின் கானோரி பகுதியில் கடந்த 45 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவாலின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

அவருக்கு மருத்துவ உதவி மற்றும் மருத்துவமனையில் அனுமதிப்பது தொடர்பான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அவர் தனது உண்ணாவிரதத்தை ெதாடரலாம் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. 45 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங் டல்லேவாலை ஒன்றிய பாஜக அரசு கவனித்துக் கொள்ளத் தயாராக இல்லை.

ஒன்றிய அரசின் பிடிவாதம் தான் ஏற்கனவே போராடிய 750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது. விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கொடுமை ஏன் நடக்கிறது? பிரதமர் மோடி தனது ஈகோவை ஒதுக்கி வைத்து, உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும். மேலும் ஜக்ஜித் சிங் டல்லேவாலின் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

The post ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு விவசாயிகளுடன் மோடி பேச வேண்டும்: பிரியங்கா காந்தி காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Priyanka Gandhi Katham ,New Delhi ,Priyanka Gandhi ,PM Modi ,EU ,Kanori ,Punjab border ,Priyanka Gandhi Katam ,
× RELATED மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லாததால்...