×

திருப்பதி கோயிலில் விஐபி-க்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும்: பவன் கல்யாண் அறிவுறுத்தல்

ஆந்திரா: திருப்பதி கோயிலில் விஐபி-க்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இந்த சொர்க்கவாசல் தரிசனத்தில் கலந்து கொள்ள திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் இலவச தரிசன டோக்கன் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருமலையில் உள்ள விஐபி கலாச்சாரம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் பார்ப்பதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் வருகை தந்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று காலை, திருப்பதி கோவிலுக்கு சென்ற பவன் கல்யாண், கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோயில் நிர்வாகிகளே இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது. கூட்டத்தை நிர்வகிப்பதில் உடனடியாக சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.

மேலும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று திருப்பதி கோவிலுக்கு பதஞ்சலி ராம்தேவ் பாபாவுடன், தெலுங்கு மாநில ஆளுநர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் இன்று தாராளமாக கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். திருமலை ஸ்ரீவாரி தரிசனம் செய்ய ஏராளமான விஐபிக்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில், விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிட வேண்டும். நீங்கள் பார்க்க வேண்டியது விஐபிகள் அல்ல, பொது பக்தர்களின் தரிசனத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறித்தியுள்ளார்.

The post திருப்பதி கோயிலில் விஐபி-க்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கைவிடவேண்டும்: பவன் கல்யாண் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tirupati temple ,Pawan Kalyan ,Andhra Pradesh ,Tirupati ,Sorkvaasal darshan… ,
× RELATED பலாத்கார மிரட்டல் விடுத்த நபர்: நிதி அகர்வால் போலீசில் புகார்