ஆட்டோ மீது அரசு பஸ் மோதல் சிறுமி பலி: பெற்றோர் படுகாயம்

 

பாலக்காடு,ஜன.10: திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரி அருகே கேரள அரசு விரைவு பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியதில் 4 வயது சிறுமி பலியானார். அவரது பெற்றோர் படுகாயம் அடைந்தனர். திருச்சூர் மாவட்டம் முள்ளூர்கரையைச் சேர்ந்தவர் உனைஸ் (31), இவரது மனைவி ரைஹானத் (26), மகள் நூர்பாத்திமா (4). நேற்று மூவரும் ஆட்டோவில் வடக்காஞ்சேரி நோக்கி சென்றுள்ளனர். அப்போது மலப்புரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்கின்ற கேரள அரசு பஸ் வடக்காஞ்சேரியை அடுத்த ஓட்டுப்பாறை சந்திப்பில் வைத்து ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய்,தந்தை மற்றும் சிறுமி ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்களை வடக்காஞ்சேரி டவுன் போலீசார் மீட்டு திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நூர்பாத்திமா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபகரமாக உயிரிழந்தார். உனைஸிற்கு கை முறிவும், இவரது மனைவி ரைஹானத்துக்கு கால்முறிவும் ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர்.

விபத்து குறித்து வடக்காஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கேரள அரசு விரைவு பஸ் டிரைவரான ஷிபினை (35) வடக்காஞ்சேரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஆட்டோ மீது அரசு பஸ் மோதல் சிறுமி பலி: பெற்றோர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: