ஊட்டி, ஜன.6: ஊட்டி தொட்டபெட்டா அருகே அமைந்துள்ள தேயிலை பூங்காவில் கோடை சீசனுக்காக பொலிவுபடுத்தும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தேயிலை பூங்காவானது ஊட்டி-கோத்தகிரி சாலையில் சுமார் 7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இப்பூங்காவில் சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் நடுவே நடைபயணம் மேற்கொள்ளும் போது தேயிலையின் வரலாற்றை அறியும் வகையில் தகவல் பலகைகள், பூங்காகவை முழுமையாக கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு சாதனங்கள் கொண்ட சிறு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் தேயிலை தூள் உற்பத்தி செய்யும் இயந்திரங்களின் மாதிரிகளும் நிறுவப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, கழிப்பறை, பார்க்கிங் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் வகையில் பூங்காவில் பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. காய்ந்த நாற்றுகள் அகற்றப்பட்டு சீசனுக்கு தயார் செய்யும் வகையில் புதிய ரக நாற்றுகளும் நடவு செய்யப்பட உள்ளன. பூங்காவில் உள்ள புல்தரையை பராமரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கோடை சீசனின் போது பூங்கா புதுபொலிவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஊட்டி தேயிலை பூங்காவில் பொலிவுபடுத்தும் பணி துவக்கம் appeared first on Dinakaran.