தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பக்தர்களிடம் காணிக்கையாக வருகின்ற பயன்பாட்டில்லாத பலமாற்று பொன் இனங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கென்று மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவினை நியமித்தார். அதன்படி உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி துரைசாமி ராஜு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மாலா மற்றும் ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்த இயலாத பலமாற்று பொன் இனங்களை பிரித்தெடுக்கும் பணி நடந்தது.
நம்முடைய தோழர்கள் குறிப்பாக, பாஜ இயக்கத்தை சார்ந்தவர்கள் அனைத்து திருக்கோயில் வாசல்களிலும் அம்மன் சிலையை அமைத்து அதில் நகைகளை பறிப்பது போன்ற கார்ட்டூன் உருவங்களை அமைத்தார்கள். முதல்வர், இத்திட்டத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்றால் அது நிச்சயம் பயனுள்ள திட்டமாக இருக்கும். அதை விடாதே பிடி என்றார். அதை பிடித்ததன் காரணமாக இன்றைக்கு சுமார் 1,100 கிலோ அளவிற்கு வங்கியிலே வைப்பு நிதியாக வைக்கப்பட்டு ஆண்டிற்கு சுமார் 17 கோடி ரூபாய் திருக்கோயில்களுக்கு வருமானமாக வர பெற்றிருக்கிறது. மேலும் இந்த திட்டம் தொடரும். 1959ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி இதுவரையில் திருக்கோயில் வைப்பு நிதியில் இருக்கின்ற தங்கத்தினுடைய மொத்த அளவு 610 கிலோ. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு இருக்கின்ற தங்கத்தின் அளவு 1,100 கிலோ. இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.
சட்டசபை கேள்வி நேரத்தின் போது எம்எல்ஏ செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், முதற்கட்டமாக ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு புதிதாக ஆர்ஓ வசதியோடு கூடிய குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5,501 அங்கன்வாடி மையங்களில் எல்இடி டிவி உள்ளிட்ட வசதிகளோடு நவீனப்படுத்தவும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 6500 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நிதியில் இருந்தும் பல வசதிகள் செய்து கொடுத்து வருகின்றனர். தமிழக அரசும் நவீன தொழில்நுட்ப வசதிக்கேற்ப மையங்களை தரம் உயர்த்திட நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.
The post வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ள நகைகள் மூலம் கோயிலுக்கு ரூ.17 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.