சென்னை : சென்னை ஐ.எசி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “நாடு முழுவதும் 10,000 ரயில் எஞ்சின்களில் ‘கவாச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ‘அம்ரித் பாரத்’ ரயில் பெட்டிகளில், பயணிகளின் வசதிக்காக அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.