×

கோயிலுக்குள் புகுந்து அரிசி மூட்டைகள் திருட்டு

போச்சம்பள்ளி, ஜன.10: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பழனி ஆண்டவர் நகரில் பிரசித்தி பெற்ற கருமலை நடுபழனி ஆண்டர் கோயில் உள்ளது. இதன் அருகில் ஜோதிலிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. நேற்று காலை இக்கோயில் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், போச்சம்பள்ளி போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விசாரணையில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து, அங்கிருந்த உண்டியலை பெயர்த்தெடுத்து, ₹5 ஆயிரம் மற்றும் அன்னதானத்திற்காக வைத்திருந்த 4 அரிசி மூட்டைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கோயிலுக்குள் புகுந்து அரிசி மூட்டைகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : BOCHAMPALLI ,KARAMALAI ,NADUPALANI ,KRISHNAGIRI DISTRICT ,BOCHAMPALI PALANI ANDWAR CITY ,Jodtilingeswar Temple ,
× RELATED மறைமலை நகர் நகராட்சி பகுதியில்...