×

சீமான் மீது போலீசில் தி.க.,வினர் புகார்

ஓசூர், ஜன.10: ஓசூர் மாவட்ட திக தலைவர் வனவேந்தன் மற்றும் நிர்வாகிகள், நேற்று ஓசூர் ஏடிஎஸ்பி ஆபீசுக்கு திரண்டு சென்றனர். பின்னர், ஏடிஎஸ்பி அக்ஷய் அனில் வாக்ரேவிடம் ஒரு மனு அளித்தனர். அதில், வடலூரில் நடபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பெரியாரை இழிவுபடுத்தும் விதமாகவும், அவரது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அப்போது, நிர்வாகிகள் செல்வம், சின்னசாமி, ரமேஷ், சின்னராசு, செல்வி கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post சீமான் மீது போலீசில் தி.க.,வினர் புகார் appeared first on Dinakaran.

Tags : D.K. ,Seeman ,Hosur ,Vanavendan ,ADSP ,Akshay Anil Waghre ,Vadalur ,Periyar ,Dinakaran ,
× RELATED சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் கைது