- ஓசூர்
- தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கிருஷ்ணகிரி மற்றும் சேலம் கோட்டம்
- ஓசூர் அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- சென்னை சாலை…
- தின மலர்
ஓசூர், ஜன.9: தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை கிருஷ்ணகிரி மற்றும் சேலம் கோட்டம் இணைந்து, ஓசூர் அதியமான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகளிடையே, சென்னை சாலை பாதுகாப்பு அலகு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன் வீடியோ மற்றும் புகைப்படத்துடன் விளக்கி பேசினார். இதில், கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கிருஷ்ணகிரி திருலோகசுந்தர், கோட்ட பொறியாளர் சாலை பாதுகாப்பு சேலம் குமுதா, உதவி கோட்ட பொறியாளர் ஓசூர் முருகன், உதவி கோட்ட பொறியாளர் சாலை பாதுகாப்பு சேலம் சுப்பிரமணியம், மற்றும் உதவி பொறியாளர்கள் சிவகுமார், ராஜ்குமார், நந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.